இதற்காக தான் இவர்கள் பிறந்தார்களா?
இன்றைய சிறுவர்களும் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களும்…………………………………..
ஓடியாடி. ஒளிந்து பிடித்து
விளையாடி
விழுந்து எழுந்து
சிந்தும் வியர்வை நீராடி
ஆழம் விழுதினில் ஊஞ்சல் தானடி
அயர்ந்து தூங்கி எழுந்திடுவோம் ஆதவன் அகிலம் ஆளுமுண்ணே
கிட்டிப்பொள்ளும்
கிளி தட்டும்
ஆடு புலி ஆட்டம் களை கட்டும்
நொண்டி கோடும்
பல்லாங்குழியும்
சண்டித்தனமும் சமாதானமும்
சின்ன சின்ன
சிரட்டைகள் சேர்த்து
சேர்ந்து நாங்கள் விளையாட்டோம்
விட்டுப் போனது அந்தக் காலம்…. ❗
இணையதளத்தில்
இணைந்திருந்தான்
இரவும் பகலும் தன்னை மறந் தான்
இருட்டு அறையில் ஒரு பொருட்டில்லாமல் அமர்ந்திருந்தான்
ஆயிரம் சொந்தம் அருகிருந்தும் என்றும் அவனே தனி மரம் தான்
தொலைபேசிக்குள்ளே தான் புகுந்தான்
வியர்க்காமல் குளிரூட்டிக்குள்
தான் இருந்தான்
விடிய விடிய விழித்திருந்தும் விடிகாலைப் பொழுது அறியாமல்
விடிந்த பின்னே தூங்கிடுவான்
விளையாட்டு என்பது
தெரியாமல்
வியர்வை என்பது புரியாமல்
புதுப்புது வியாதிக்கு அடிமை
ஆகி விட்டான்
கொலஸ்ட்ரால் என்றான்
பிரசர் என்றால்
பசியைத் தேடி ஓடுகின்றான்
பாவம் இந்த ஜென்மங்கள் பிறந்ததேனோ சொல்லுங்கள்……. ❓
அ. அ. நவாஸ்.
இலங்கை
வவுனியா