மண்ணில் காலூன்றிய உயிர்கள் இவை…!
சட்டி பானைகள் மண்ணால்
செய்யப்பட்டது …
இங்கே மண் , வின் , காற்று ,
ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சை
நமது உடல் , நம் உயிர் வாழும் கூடு
( அல்லது அதன் புத்திரர்கள் நாம் ) …
ஆனால் மண்ணில் காலூன்றி
வேரூன்றி வாழும் உயிர்களுக்கு
கடலில் நீந்தி வாழும் உயிர்கள்
எதற்கும் இந்த மண்ணே தாய் …
இந்த மண் மட்டுமே …
இங்கே மண்ணின் ஆரோக்கியமே …
இங்கே வாழும் பல்லுயிர்களின்
ஆரோக்கியம் …
அன்னையின் ஆரோக்கியம்
கெட்டுப் போனால் அவள் பெற்ற குழந்தைகளின்
ஆரோக்கியமும் அப்படியே …
மண் நலம் காப்பது மனிதரின் கடமை … ஏனெனில் இயேசு சொன்னது போல் கடவுள் தன் சாயலாகவே மனிதனைப் படைத்திருக்கிறான் …
மனித வாழ்வு முன் வந்து போனவர்களை வணங்கிச் சாவதல்ல … அதற்கு மேலும் மேலும் அன்பால் , அறத்தால் , கருணையால் இறைவனாய் அவரவர் மாற வேண்டும் என்பதே இந்த இயற்கையின் இறைவனின் விருப்பம் …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052