மனித இனம் ஏன் இதை புரிந்துக்கொள்ள மறுக்கிறது?

உயிர்க்காற்று என்றும்
பிராணன் என்றும் இந்த உடலில் உயிர் வாழ எடுத்துக் கொள்ளும் … முதல் ஆகாரம் என்றும் …
வெறும் பேச்சளவில்
மட்டும் பேசும் மனித இனம் ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறது …

காற்று
கண்ணுக்குத் தெரியவில்லை என்பதாலா ? அதே சமயம் நம்மையெல்லாம் இயக்குவது ஏதோ ஒரு சக்தி தான் எனப் பேசிக் கொண்டே …இறைவனை மட்டும் உருவகப்
படுத்திப் பார்க்க மட்டும் ஆசைப் படுகிறது …என்பது தான் ஏனோ புரியவில்லை … கடவுள்
வணங்கக் கூட நம் உடலில் உயிர்க்காற்று
இருந்தால் மட்டுமே சாத்தியம் …ஆக கடவுளைக் காட்டிலும் …
முக்கியமானது காற்று …

அது தவழ்ந்து வரும் சுற்றுச்சூழல் …
நாம் வெளிவிடும் மூச்சுக் காற்றான
கரியமில வாயுவை
தனது உணவாக உட்கொண்டு … அதை
நாம் சுவாசிக்கும் பிராணவாயுவாய் மாற்றித் தரும் மரங்கள்…

இவையே
மனிதனுக்கு மட்டும் அல்ல… மரங்களைத்
தவிர்த்து அனைத்து உயிர்களுக்குமான …
அதி முக்கியமான
உணவென உணர்வோம் …

அதற்குத்
தக்கபடி நம்மை நாமே
மாற்றிக் கொள்வோம் …
இல்லையெனில் மானுடம் …துன்பங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும் ….

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *