இங்கு போர் தர்மம் இருக்கிறதா?
போர் தர்மம்
என்ற
ஒரு நியதி உண்டு…
அதை
தமிழ் மறவர்கள்,
காலம் காலமாக
கடைப் பிடித்து
வருகின்றனர்…
போர் தர்மத்தை
கைக் கொண்டதால்
தான்,
கேப்டன் பிரபாகரன்
தோற்றுப்போனார்.
தோற்றது
பிரபாகரன் அல்ல…
போர் தர்மமே…
ராணுவத்திற்கு
எதிராகத்தான்
பிரபாகரனின்
போர்…
பொது மக்களை
நோக்கியது அல்ல…
பொது மக்களை
கொன்றுத்தான்…
தமிழன்
வீழ்த்தப்பட்டான்…
இதே
கோழைத்தானமான
போர் யுக்தித்தான்
அங்கும் நடக்கிறது.
பாலஸ்தீன போர்
நிறுத்தம்…
மனுக்குல மரணத்தை
தடுத்திருக்கிறது….
பொது மக்களை
நோக்கிய
தாக்குதல்…
வன்முறை யற்றி
வேறென்ன…
பிஞ்சுகளின்
கண்ணீர்…
மரண வேதனை
தருகிறது…
மாதமும் ஜாதியும்
மனித நேயத்தை
தகர்க்கும்
ஆயுதமா என்ன…?
அன்பை வளர்க்காத…
அறிவியலால்
மனித குலத்திற்கு
என்ன பயன்…
யுத்தத்தில்
தலையை கொய்து…
கொடுரம் செய்த
ஜப்பன்காரன்…
அறிவை வளர்த்து
அமையாக
இருப்பது…
போரின் ரணத்தை
உணர்ந்ததால் தான்…
பாலஸ்தீனத்தில்
போர் நிறுத்தம்
மட்டும் போதாது…
அணு
ஆயுதத்திற்கும்
எதிராக
அன்பு மலர்வதே
என் பேராசை…
ஆக்கம் :
வேல் முருகன்
சுப்ரமணியம்
தெலுக் பங்ளிமா காராங்
சிலாங்கூர்
மலேசியா