இவை எல்லாம் இயற்கையின் வரமா?
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *இயற்கை எழுதிய* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
எத்தனையோ
கவிஞர்களின்
கவிதைகளை
வாசித்திருக்கிறீர்கள…
என்றைக்காவது
இயற்கை எழுதிய
கவிதைகளை
வாசித்திருக்கிறீர்களா?
இதோ!
இயற்கை எழுதிய கவிதை…
அலைகள்
தன்னம்பிக்கை கவிதை….
சிலந்தி வலை
முயற்சி கவிதை…..
வானவில்
ஒற்றுமை கவிதை….
மழை
கருணை கவிதை….
மலை
வலிமை கவிதை….
தென்றல்
தோழி கவிதை….
பூக்கள்
வாழ்க்கை கவிதை….
காலை நேரம்
பிறப்பு கவிதை……
மாலை நேரம்
இறப்பு கவிதை….
எரிமலை
புரட்சி கவிதை…..
அருவி
எழுச்சி கவிதை…..
நிலவு
காதல் கவிதை….
சூரியன்
ஆன்மீக கவிதை…..
புயல்
கோபக் கவிதை…..
கடல்
நட்பு கவிதை…..
ஆறு
சமுதாயக் கவிதை….
குளம்
மானுட கவிதை……
வண்ணத்துப்பூச்சி
மலரில் தேன் எடுப்பது
தாம்பத்திய கவிதை……
பறவைகள்
குஞ்சுகளுக்கு
உணவு ஊட்டுவது
அம்மா கவிதை……
பறவை
கூடு கட்டுவது
அப்பா கவிதை…..
குழந்தைகளின் சிரிப்பு
தெய்வீககவிதை ……
புல்வெளி
அன்பு கவிதை …….
பாலைவனம்
சுயநல கவிதை……
பள்ளத்தாக்கு
பிரிவு கவிதை……
பூக்களின் மீது
பனித்துளி
அழகு கவிதை…….
மலைமுகட்டில் மேகம்
மோக கவிதை…….
நிலம்
பொறுமை கவிதை……
காற்று
சான்றோர் கவிதை…..
இருள்
அமைதி கவிதை…..
ஒளி
உண்மை கவிதை……
இசை
தாலாட்டு கவிதை….
ஒலி
மொழி கவிதை……
இயற்கை
எழுதிய
கவிதைகள் எல்லாம் புதுக்கவிதைதான்…..
ஏனெனில்
அதில்
எதுகையும் இல்லை
மோனையும் இல்லை
அசையில்லை
அடி இல்லை சீர் இல்லை
தொடையில்லை
எதுவும் இல்லை
ஆனால்
ஆனால்
” உண்மை “இருக்கும்….!! *கவிதை ரசிகன் குமரேசன்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈