சிறுமியை சித்ரவதை செய்த ருஹூணு பல்கலை கழக தொழிநுட்ப பீட விரிவுரையாளர்..!
5 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி குறித்த சிறுமியை சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக ருஹூணு பல்கலைகழக தொழிநுட்ப பீட விரிவுரையாளர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்புருப்பிட்டியவில் அமையப்பெற்றுள்ள பல்கலை கழக உத்தியோக பூர்வ இல்லத்தில் குழந்தையொன்று அடிக்கடி அழுவதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கம்புருபிட்டிய உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி வருணி கேஷலா போகஹவத்த உள்ளிட்ட குழுவினர் சென்று குறித்த சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
மூக்கு,உதடு,கண்ணம் போன்றவை காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,தாக்குதல் காரணமாக சிறுமியின் உடல் நீல நிறத்தில் இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை குறித்த சிறுமியை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளீர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.