உலகின் சிறந்த கடவுச்சீட்டுக்கள் 2024 தரவரிசை முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை தெரியுமா?
2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறப்புவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது
குறித்த பட்டியலை வழமைபோல தரவரிசை அறிவிக்கும் Henley Passport Index வௌியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியனவும், வழமைபோல முதலிடத்தைத் தக்கவைக்கும் ஆசிய நாடாளான ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர் முதல் இடத்தை தக்கவைக்கின்றன.
இந்த பட்டியலில் பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டில் இருந்து 80 ஆவது இடத்தையும் இலங்கை 96 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய இராச்சியம், நோர்வே ஆகிய நாடுகள் நான்காம் இடத்திலும் சுவிஸ் ஐந்தாம் இடத்திலும் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆறாம் இடத்திலும் கனடா மற்றும் அமெரிக்கா ஏழாம் இடத்தையும் தக்கவைக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த பட்டியலை Henley Passport Index தயாரித்து வருகிறது.
இவை அனைத்தும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.