வெயில் எரிக்கும் போது தான் இது தேவைப்படுகிறது..!
மரம் ஒரு வரம்_ஆக்கம்_ - *கலைவாணி*
பழிக்குப் பழி என்ற கூற்று
உறுதியானது…..
அன்று
மரத்தை வெட்டி
“எறியும்” போது தெரியவில்லை
இன்று வெயில்
“எரிக்கும்” போது
மரத்தின் அருமை புரிகிறது…
மரத்தைவெட்டி
“ரெக்கம்” பார்த்த போது
தெரியவில்லை…..
மரம் செடி கொடி இல்லாமல்
“வெப்பம்”
தாக்கும் போது
மரத்தின் அருமை தெரிகிறது…
நாம் போட்டிருக்கும்
மோதிரத்தில் கல்லோ
வெள்ளி கொலுசில்
முத்துகலோ கீழே விழுந்தால்
துடிக்கும் நெஞ்சு…
நீர் இல்லாமல் தினமும்
இலை பூ காய் கனி
கீழே விழும்போது
துடிக்காமல் போனதே…..!!
புரிந்தவனுக்கு
கையில் பழமாகவும்
பசிக்கு உணவாகவும் உதவுகிறது
அருமை புரியாதவனுக்கு
மெத்தை போடும் கட்டிலாகவும்
பொழுதுபோக்கும்
நாற்காலியாகவும் தெரிகிறது….
வெறுங்காலில் நடப்பவனுக்கு செருப்பின் அருமை
புரிவது போல்
ஒரு நாள்
மரமே இல்லாமல் போகும்போது
மரத்தின் உறுமை
உங்களுக்கு புரியுமோ….?
வீட்டுக்கு ஒரு
பிள்ளை வளர்ப்பது போல்
இனியாவது
வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம்……!!! - *கலைவாணி*