மழை..!

மழை பற்றி ஒரு கவிதை படித்துப் பாருங்கள் மனம் நனைகிறதா என்று……

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ *மழை நாளில்...*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

ஒரு மழை நாளில்தான்
நான்
கவிதைக்குள் நுழைந்தேன்
கவிஞனாக
வெளியே வந்தேன்….!

எந்த நாளிலும்
டீ குடிக்காத நான்
மழை நாளில் தான்
டீ குடிப்பேன்
ஆம்…!
எந்த டீ மாஸ்டர்ரும்
மழையை போல்
டீ போட்டு விட முடியாது….. !

மழை நாளில்
சன்னல் அருகாமையை
அதிகம் நேசிப்பேன்
ஏனென்றால் ?
காதலியை விட
சன்னல் அதிக
சுகத்தைத் தரும் என்பதால்…

மழையிடம்
கைகளை
விரும்பி கொடுப்பேன்
அது
இதயத்தைக்
“குளிப்பாட்டி” விடும் என்பதால்…

எல்லா மழையிலும்
எல்லோருக்குமான
ஆலங்கட்டி
இல்லாமல் போனாலும்
எல்லா மழையிலும்
எனக்கான கற்பனை
இருந்தது…

படிக்க மறந்த
கவிதை புத்தகத்தை
தூசி தட்டி
படிக்கத் தொடங்குவேன்
அக்கவிதைக்கு
மழைத்துளிகளே !
இசையமைத்து
பாடலாக்கி விடும் என்பதால்…..

வாசல் வரை
ஓடிவிட்டு வருவேன்
வாசல் வரை வந்த மழையை
வீட்டுக்குள்
வரவேற்கவில்லை என்று
கோபித்துக் கொண்டு
திரும்பவும் வராமல்
போய்விடுமோ என்று….

மழையில்
குடை பிடித்து செல்வேன்..
அது துளியாக
மடியில் விழுவதை விட
சாரளாக
தோளில் சாய்வது
இன்பமாக இருக்கும் என்பதால்….

துணையை
இழுத்துக் கட்டிக்கொள்வேன்
மழையை இழுத்து
கட்டிக்கொள்ள முடியாது என்பதால்…!
மழை வேறு
துணை வேறா…? *கவிதை ரசிகன் குமரேசன்*

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *