ருவாண்டா விமானம் தேர்தலுக்குமுன் போகாது|இன்று சொன்ன ரிஷி
ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான திகதியை ஜூலை 4 என அறிவித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அகதி அந்தஸ்து கோரியவர்களை ரூவாண்டாவுக்கு அனுப்பும் விமானம் , தேர்தலுக்கு முன் புறப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் சமூக மட்டத்தில் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ரூவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை வெற்றிபெறச்செய்துவிட்டு, முதல் விமானம் ஜூலை மாதம் புறப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்திருந்த நிலையில் , இன்று விமானம் புறப்படாது என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறார் தற்போதைய இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக்.
வரும் பொதுத்தேர்தலில் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக இந்த ருவாண்டா விமானம் இருக்கும் என்பதற்கு சான்றாக, இன்றே அது பற்றி பேசத்துவங்கி விட்ட்டார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

ஜூலை ஐந்தாம் திகதி தான் வெற்றிபெற்றால் விமானம் நிச்சயம் புறப்படும் என்பதை ரிஷி குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை எதிர்க்கட்ச்சியான தொழிற்கட்சி வேட்ப்பாளர் கெயர் ஸ்டாஅமர் தான் வெற்றிபெற்றால் ரூவாண்டாவுக்கு புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்பப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது