முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கொர்பைன் என்ன செய்யப்போகிறார்?|பிரித்தானிய பொதுத்தேர்தல்
முன்னாள் தொழிற்கட்சித் தலைவராக கட்சியை வழிநடாத்திய ஜெரமி கொர்பைன், அந்தக் கட்சிக்கு எதிரான நிலையில் இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதை அவர் தெரிவித்துள்ளார்.
1983 முதல் அவர் பிரதிநிதித்துவப்படுத்திவரும் இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் வரும் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கப் போவதாக அவரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த பத்திரிக்கைக்கு அவர் வழங்கிய பேட்டியில் ,இவ்வளவு காலமும் இருந்ததைப்போலவே, “சமத்துவம், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான குரலாக” இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 இல் தொழிற்கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த பின்னர், நடப்பு தலைவர் கியர் ஸ்ராமர் அவர்களால் பாராளுமன்ற தொழிலாளர் கட்சியிலிருந்து இடைநீக்கம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். கட்சியின் யூத-விரோத புகார்களை, கட்சி கையாண்டாமை குறித்த சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் போது, குறித்த பிரச்சினையின் அளவு “ஆச்சரியப்படும் விதத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி, வடக்கு லண்டனில், குறித்த தேர்தல் தொகுதியில், திரு கோர்பினுக்கு பதிலாக தொழிற்கட்சி தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.