கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானை வென்றது ஐக்கிய அமெரிக்கா

T20 உலகக்கிண்ண போட்டிகளின் இன்றையபோட்டியில் ஐக்கிய அமெரி்க்கா பாகிஸ்தானை வென்று சாதனை படைத்தது.


முன்னதாக நடைபெற்ற போட்டியில் சமநிலையில் நிறைவுகண்டதை தொடர்ந்து , வழங்கப்பட்ட சுப்பர் ஓவரிலும் அதிரடியாக ஆடி, பாகிஸ்தானை 5 ஓட்டங்களால்  வெற்றி கொண்டது அமெரிக்கா.
போட்டியின் ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிகொண்ட அமெரிக்கா,  களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் , 20 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா விறுவிறுப்பாக ஆடி,3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 20 ஓவர்களில் 157 ஓட்டங்களை எடுத்து சமனிலையில் நிறைவுகண்டது.
தொடர்ந்து போட்டியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட அதிலும் அதிரடியாக ஆடிய அமெரிக்கா , 5 ஓட்டங்களால் பாகிஸ்தானை தோற்கடித்து தனது வெற்றியைப்பதிவு செய்தது.

ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக 50 ஓட்டங்களை 38 பந்துகளில் குவித்து அதிரடியாக ஆடிய Monank Patel தெரிவு செய்யப்பட்டார் .
இதன்படி தங்கள் குழுவில் அமெரிக்க அணி 4 புள்ளிகளுடன் முன்னிலையை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *