பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக சேர்க்கை கையேடு, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை அச்சிட முடியவில்லை என்றும், ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆவணிமாத கடைசி வாரம் அல்லது புரட்டாதி முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் மொத்தமாக கோரப்பட்ட பின்னர் , பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச Z மதிப்பெண்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.