தரவரிசையில் முன்னேறிய இலங்கை அணி..!

ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஏழாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து இந்த மாற்றம் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் வீரர் சனத்ஜயசூரியவின் சிறந்த பயிற்றுவிப்பின் மூலம் இலங்கை அணி இந்திய அணியை வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு போட்டிகளில் இலங்கை அணி விளையாடி தோல்வியினை சந்தித்து வந்த வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இருப்பது அனைவரினதும் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *