செய்திகள்

போப் ஆண்டகை கிழக்கு திமோர் பயணம்..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை கிழக்கு திமோருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன் போது ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்,பிரதம மந்திரி சனானா குஸ்மாவோ ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து போப் ஆண்டகையை வரவேற்றனர்.வரவேற்பு நிகழ்வில் போப் ஆண்டகை உரையாற்றினார்.இதன் முக்கிய உயர் அதிகாரிகள் இருந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டகை ,இதன் ஒரு கட்டமாக கிழக்கு திமோருக்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 1989 ம் ஆண்டு கிழக்கு திமோருக்கு போப் ஆண்டகை ஜோன் போல் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு திமோரில் காணப்படும் 13 லட்சம் மக்களில் 98 சதவீதமான மக்கள் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *