வானவில்..!

🩷❤️🧡💛💚🩵💙💜💜🖤🩶 *காதலின்றி* *வேறில்லை...* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍

பூப்போலே
என் நினைவில் பூத்தவளே !
பால் போலே
என் நெஞ்சில் நிறைந்தவளே…!

உனக்கு
விண்வெளியில் வீடு கட்டி
வெண்ணிலாவை
விளக்காகட்டுமா ?

விண்மீன்களை
பறித்து….
மின்னலிலே
உன் கூந்தலுக்கு
பூத்தொடுக்கட்டுமா…..?

வானவில்லை
எடுத்து வந்து
உன் வாழைத்தண்டு கரத்திற்கு
வளையல் செய்யட்டுமா….?

பூலோகப்
பூக்களை எல்லாம்
கொய்து வந்து
உன் பாதம் நடக்க
பாதை அமைக்கட்டுமா….?

வெண்மேகத்திலே
நூல் எடுத்து
உன் கட்டழகு மேனிக்கு
ஆடை நெய்யட்டுமா…?

இவையெல்லாம்
பொய்யாகிப் போனாலும்
உன் மீது
நான் கொண்ட காதல்
என் மரணத்தை விட
மெய்யானது…..*கவிதை ரிசகன்*

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *