உலகம் எதையும் சொல்லும்..!
ஆனதெல்லாம் ஆகட்டுமே
தம்பி தம்பி – உன்
ஆசையெல்லாம் முடித்துவிடு
உன்னை நம்பி …
உலகம் எதையும்
சொல்லுமடா …தம்பி தம்பி …
நீ …. உன் உள்உணர்வு
சொல்வதைக் கேள் …
என் அன்புத் தம்பி …
என்றென்றும்
உன்னை நம்பி …
ஊர் போட்ட
பாதையெல்லாம் அன்புத் தம்பி …
எவனெவனோ ? தன் சுயநலத்தில்
போட்டதடா அன்புத் தம்பி …
எதையும் ஏற்கும் போது ஏற்று …
தள்ளும் போது தள்ளி …நீ உன்
வாழ்வைக் கொண்டாடு
அன்புத் தம்பி …
உயிர்க்
காதலோடு எதனையும் நேசி
அன்புத் தம்பி … இங்கே
நீயும் ஒரு அவதாரமே ….
என்று நம்பி …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052