யூகோன் பகுதியில் நிலநடுக்கம் பதிவு..!
நேற்று இரவு கனடாவின் வடக்கு யூகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.