ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
வட ஆப்கானிஸ்தானின் படாகூஷான் பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
படாகூஷானிலிருந்து 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கமானது நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.