நில நடுக்கத்தினால் பலர் உயிரிழப்பு..!

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தானில் 320 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை 100ற்கும் அதிகமானோர் காயத்திற்குற்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் குறிப்பிட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவல் படி 6.3 ரிச்டர் அளவின் படி நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நேற்று பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறை
யே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நிலநடுக்கங்களினால் ஃபாரா மற்றும் பட்கிஸ் மாகாணங்கள் பாதிகப்பட்டுள்ளதாகவும்.உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *