250 ரொக்கெட்டுக்களை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல்..!

நேற்றைய தினம் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் மீது 250 ரொக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன போது 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இஸ்ரேலிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலைமையிலேயே ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *