கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி..!
தாயாக விளங்கும் தமிழே!*
✨✨✨✨✨✨✨✨✨✨
எம் தமிழ்
எம் மொழி!!
தமிழ் மொழி
தாய் மொழி!
கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி!!
தென்னகம் தந்த
தெய்வீக மொழி!
தித்திக்கும்
தேன் மொழி!
திகட்டாத
பொன் மொழி!
இம்மொழி போன்று
இவ்வுலகில் யாம்
இதுவரை கண்டதில்லை!
இனி காணப் போவதும் இல்லை!
அகரமே! ஆச்சர்யமே!
மொழிகளின் மூத்தவளே!
முத்தமிழே! முக்கனியே!
முழு முதற் பொருளே!
கம்பன் தந்த ஓவியமே!
ராமாயண காவியமே!
செந்தமிழே சிங்காரமே!
சித்தர்கள் அருளிய தேனமுதே!
பைந்தமிழே! பரவசமே!
பாரதி படைத்த பாஞ்சாலி சபதமே!
அன்ன நடை அலங்காரமே!
ஆழ்வார் பாடிய நாலாயிரபாசுரமே!
அழகே அற்புதமே!
அடியார் போற்றும் தேவாரமே!
இன்பமே! இனிமையே!
இரண்டு அடியில் அறிவை
ஈரேழு உலகுக்கு அளித்த
ஈடில்லா வள்ளுவமே!
தெம்மாங்கு
இசை பாடி
திக்கெட்டும் ஒலிக்கும்
குறவஞ்சியே! குதூகலமே!
தத்துவம் அள்ளித்தரும்
கண்ணதாசன்
காவியமே!
அழகு தமிழ் ஓவியமே!
ஆனந்தமே!
ஔவை தந்த
அமுதமே!
விநாயகர் அகவலே!
நன்முத்தே!
நவ மணியே!
நால்வர் அருளிய திருவாசகமே!
தித்திக்கும் செந்தமிழில்
தேன் மதுர இசை பாடும்
திருப்புகழே!
திவ்ய நாதமே!
எங்கும் நிறைந்திருக்கும்
மொழியே! என்
அன்னை தமிழே!
என்றும் அழியா தமிழே தாயாக விளங்கும் செந்தமிழே!
*நீ வாழ்க வளர்க!*
*பா ஆக்கமும் படைப்பும்*
என்றும் அன்புடன்
*நா.ஆனந்தி சேது*
சிங்கார சென்னை