மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் விடுதலை.

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆறு மாத கால சிறைத்தண்டனை காலம் முடிந்த பின்னர் இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.