ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொட்டாஞ்சேனையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில், 12 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புளூமெண்டல் மற்றும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18 ஆம் திகதி இரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கி கொலை செய்த குற்றத்தில் இரண்டு சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.