விசிறி ஆகும் சேலை..!
சேலை
என் தாய்
என்னை
மடியில்
அமர்த்தி
தலைமூடி
அவளின்
சேலைக்குள்
கவசமாக
பால்
கொடுத்த
தேவதை
என் அம்மா!
நான்
பல நாள்
அம்மாவின்
சேலை
முந்தானைக்குள் என்னை
அடைக்கலமாய் அணைத்திட்ட
என் தாய்!
மழை
என்றாலும்
வெயில்
என்றாலும்
அவள்
சேலை
முந்தானை
குடையாய்
சிறகை
விரித்து
பாதுகாக்கும்
தாயின்
சேலை!
என் தாய்
அவளின்
சேலை
மடிக்குள் மணிக்கணக்காய்
தூங்க
வைத்த
மடித் தூளியாய்
சேலை!
!சேலையில்
தூளி கட்டி
பந்தம்
இறுக்க
நானே
சேலை
என
சொல்லாமல்
சொல்லி
நம் கையை
சேலையில்
பிடித்துக்
கொண்டு
தாய் மடியென
தூங்கிய
சேலை !
அம்மாவின்
சேலை கட்டி
நம்மை
அழகு
பார்த்த
தேவதை !
ஒவ்வொரு
ஆண்டின் விழாக்காலங்களில் அம்மா
உடுத்திய
சேலை
அவளை
தேவதையாய்
காட்டிய
சேலை !
என்தாய்
மடியில்
படுக்கும்
போது
அழகிய
விசிறியாகும்
சேலை!

நான்
கண்கலங்கி
நிற்கும்
போது
என்னை
சேலை
முந்தானைக்குள்
அரவணைத்து கண்ணிர்த்
துளிகளை
துடைத்த
பெரிய
கைகுட்டையாய்
தாயின்
சேலை !
குளிருக்குள்
அம்மாவின்
சேலையை
இரண்டாய்
மடக்கி
போர்த்துக்
கொண்டு
குளிரை
விரட்டிய
நாட்கள்
மறக்க
முடியாத
பல சேலை !
என்
கண்களில் வாழ்க்கையை
வாசித்துக்
காட்டுகிறது
நெஞ்சின்
ஓரங்களில்!
இரம்ஜான் எபியா சென்னை