எனது விடியல்..!
💔💚💔💚💔💚💔💚💔💚💔 *எப்போது ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
💔💚💔💚💔💚💔💚💔💚💔
பெண்ணே !
என் வாழ்க்கையை
உன்னிடம்
கொடுத்திருக்கிறேன்..
வாசிக்கப் போகிறாயா ?
கசக்கி எறியப் போகிறாயா?
உன் மௌனம்
அதிகம்
பேச வைக்கிறது என்னை….
நான்
உனக்கு
இதயத்தையே !
கொடுத்து விட்டேன்
நீ !
பார்வையைக் கூட
கொடுக்கவில்லை..
நீ
தலை குனிவது
வெட்கத்திலா ?
வெறுப்பிலா ?
எனது விடியல்
உன் வருகை ….
எனது அஸ்தமனம்
உன் பிரிவு ….
இப்போதெல்லாம்
என் கவிதைக்கு
நீயே விதையாகிறாய்…!!!
என்னை
தொலைக்கவில்லை
உன்னிடம்
கொடுத்திருக்கிறேன்
பத்திரமாகப்
பார்த்துக் கொள்….
என்னையே !
பார்க்க ஆசைப்படாதவன்
உன்னை பார்க்க
ஆசைப்படுகிறேன்….
மனம் கூட
மனப்பாடம்
செய்வதற்கு தான் என்று
நினைத்திருந்தேன்
உன்னை பார்க்கும் வரை….

என் பெயர் கேட்டால்
உன் பெயர் சொல்கிறேன்
நான்
நீயாகி விட்டேன்
நீ
நானாவது எப்போது…? *கவிதை ரசிகன் குமரேசன்*
💔💚💔💚💔💚💔💚💔💚💔