அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இடையூறுகளுக்கு எதிராக கண்டன பேரணி…!!!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் முன்னெடுக்கப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்று இன்று 2025.05.22 இடம்பெற்றது
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார சேவை பணியாளர்கள் அடங்கலாக அனைத்து உத்தியோகத்தர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டன பேரணியில் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுகளை கண்டிப்பதாக தெரிவித்ததுடன், வைத்தியசாலையின் சீரான இயக்கத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் சில வைத்திய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பொய் குற்றச்சாட்டுக்களை கண்டிப்பாகவும் பேரணியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்
அத்துடன் சில வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இந்த விஷமத்தனமான பிரச்சார நடவடிக்கைகள் கண்டிப்பதோடு வைத்தியசாலையின் இயல்பு நிலைக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.