மெய்வல்லுநர் சம்பியனாகியது யாழ் இந்து.
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம், வடமாகாணம் மற்றும் அனுராதபுர மாவட்டத்தினை இணைத்து நடாத்திய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ் இந்துகல்லூரி கூடிய பதக்கங்களை வென்று முதலிடத்தை தக்கவைத்து சம்பியனாகியது ,

4 தங்க பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள், 1 வெண்கல பதக்கங்களுடன்
7 திறமை சான்றிதழ்களையும் பெற்று 76 புள்ளிகளுடன் சம்பியனாகியது.
இரண்டாவது நிலையை அனுராதபுரம லைசியம் சர்வதேச பாடசாலை 72 புள்ளிகளுடனும்
மூன்றாவது நிலையை மன்னார் புனித சவேரியார் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
போட்டிகள் கடந்த ஜூலை 16ம்,17ம் திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
