ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டு ரப் இசைக் கலைஞர்கள்.
தான் பதவி விலகமுதல் டிரம்ப் 70 தண்டனை மன்னிப்புக்களும் 73 தண்டனைக் குறைப்புக்களையும் செய்திருக்கிறார். ஆயுதங்கள் [துப்பாக்கி] சம்பந்தப்பட்ட குற்றங்கள் செய்த லில் வைன், கொடக் பிளக் ஆகிய ரப் இசைக்கலைஞர்களே அவர்கள். லில் வைன் 10 வருடத் தண்டனையும், கொடக் பிளக் 3 வருடங்கள் 10 மாதங்கள் தண்டனையும் பெற்றிருந்தனர்.
தனது முதலாவது தேர்தல்ப் பிரச்சாரக் காலத்தில் தனக்குப் பக்கபலமாக நின்று கோட்பாட்டு அமைப்புகளை வகுத்த ஸ்டீவ் பன்னன் ஜனாதிபதி மன்னிப்பைப் பெற டிரம்ப்பின் வக்கீல் ஜூலி குலியானிக்கு அது கிடைக்கவில்லை. அத்துடன் தனது குடும்ப அங்கத்தினரெவருக்கும் தனக்கும் டிரம்ப் மன்னிப்புக் கொடுத்துகொள்ளவில்லை.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து அந்த நிறுவனத்துக்காக தானே இயங்கும் வாகனங்கள் மென்பொருளான Waymo ஐ வடிவமைத்த அண்டனி லெவண்டோவ்ஸ்கி ஜனாதிபதி மன்னிப்புப் பெற்றார். கூகுளிலிருந்து விலகி ஊபர் டெக்னொலொஜி நிறுவனத்திடம் பணியாற்றப் போன லெவண்டோவ்ஸ்கி கூகுளிலிருந்து அந்தத் தொழில்நுட்பத்தின் இரகசியமான விடயங்களைக் களவாடிச் சென்றதற்காகச் சிறைத்தண்டனை பெற்றவராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்