முதல்வராகும் 19 வயது இளம்பெண்!
ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண் பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அதையொட்டியே உத்ரகாண்டைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இளைஞர்கள்/சிறார்கள் மாநில சட்ட மன்ற முதல்வராக இருந்து வரும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி இந்த ஒரு நாள் மாநில முதல்வர் பணியின்போது, அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் ஆய்வு செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒருநாள் முதல்வர் பணி குறித்து இளம்பெண் ஸ்ருஷ்டி கோஸ்வாமி, “இது தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும் . தான் வாழ்வின் மகிழ்ச்சியான விடயம் என்றும் குறிப்பிட்டார்.அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி மக்கள் நலனுக்காக உழைத்து இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் தன்னால் நிரூபிக்க முடியும் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.