சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.
உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களிரண்டுக்கும் மென்மையான சுகவீனங்களே தெரிந்தன. புலியோ திடீரென்று மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வேதனையை அனுபவித்தது என்று மிருகக்காட்சிசாலையினர் குறிப்பிடுகின்றனர். எனவே அதைக் கொல்லவேண்டியதாயிற்று.
இதுவரை இதுபோன்ற மிருகங்கள் மனிதர்களுக்குத் தொற்றைப் பரவியதாக அறியப்படாததால் மிருகக்காட்சிசாலை ஊழியர்களிடமிருந்தே தொற்று குறிப்பிட்ட மிருகங்களுக்குப் பரவியிருக்கவேண்டுமென்று ஊகிக்கின்றனர். மிருகக்காட்சிசாலை ஊழியர்களில் மூவருக்குத் தொற்று இருந்தது கவனிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட விலங்குகள் தவிர்ந்த ஒரு ஆண் புலிக்கும், ஒரு சில சிங்கங்களுக்கும் மிகவும் லேசான தொற்று உண்டாகி அவைகள் விரைவில் குணமடைந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்