பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

https://vetrinadai.com/news/coronavirus-curfew-france/

இதனால் பாடசாலைக் கன்ரீன்களை மூடுதல், மாணவர்களது வெளிப்புறச் செயற்பாடுகளை நிறுத்துதல் உட்பட இறுக்கமான சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்துவருகிறது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வைரஸ் அச்சத்தில் பாடசாலைகளை மூடுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடாக – பாடசாலைகளில் மாணவர்களிடையே நெருக்கமான தொடர்புகள் ஏற்பட வாய்ப்பாக உள்ள கன்ரீன்களை மூடுதல், (fermeture des cantines, ) விளையாட்டு நிகழ்வுகள் (activités sportive), மாணவர் களது வெளிப் பயணங்கள் (sorties scolaires) என்பவற்றை நிறுத்துதல் ஆகிய யோசனைகளை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர் என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

மாற்றமடைந்து பரவும் புதிய வைரஸ் தொற்று தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தேசிய அளவில் பொது முடக்கம் ஒன்றைத் தீர்மானிப்பதற்கு முன்னராக எடுக்கவேண்டிய வேறு சில முக்கிய கட்டுப்பாடுகளை அரச உயர் மட்டம் ஆராய்ந்து வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

இந்த யோசனைகள் அனைத்தும் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்ட பிறகே அவை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *