எலிஸே தேசியக்கொடியில் மாற்றம் செய்தார் மக்ரோன்; கடற்படை நீல நிறம் சேர்ப்பு.

யின் நீல நிறத்தை அதிபர் மக்ரோன் மாற்றி அமைத்துள்ளார் என்று பாரிஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

எலிஸே மாளிகையில் காணப்படும் தேசியக் கொடிகளில் அதன் வழமையான மென் நீல நிறத்துக்குப் பதிலாகக் கடும் கடற்படை நீல வர்ணம் (darker navy blue) சேர்க்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எந்த வித அறிவித்தலும் இன்றியே கடந்த ஆண்டு முதல் கடற்படை நீலநிறம் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரெஞ்சுப் புரட்சியின் ஓர் அடையாளமாகிய தேசியக் கொடியில் ஆரம்பத்தில் சிவப்பு, வெள்ளை நிறங்களுடன் கடற்படை நீல நிறமே புழக்கத்தில் இருந்து வந்தது.

அதனை 1976 இல் அப்போதைய அதிபர் Giscard d’Estaing அவர்களது அரசாங்கம் மெல்லிய நீல நிறத்துக்கு மாற்றியமைத்தது. ஐரோப்பியக்கொடியில் காணப்படுகின்ற நீல நிறத்துடன் பொருந்தும் வகையிலேயே மெல்லிய நீல நிறம் மாற்றப்பட்டது. அதன் பிறகு நாட்டின் தேசியக் கொடியில் இரண்டு வகை நீல நிறங்களையும் பயன்படுத்தும் வழமை இருந்து வருகிறது. அதிபர் மக்ரோனின் விருப்பத்தின்பேரில் தற்சமயம் எலிஸே மாளிகைக்கொடிகளும் கடும் நீல வர்ணத்தில்காட்சியளிக்கின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.