டொனால்ட் டிரம்ப் மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகிறார்.
ஜனவரி 20 ம் திகதி புதனன்று புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கிறார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அமளிதுமளி செய்த ஒரு வாரத்தின் பின்னர் அந்த அத்துமீறல்களுக்குத் தூண்டியதற்காக உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குள்ளாக வேண்டுமென்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசாரணைக்கு ஆதரவாக 232 பேரும் எதிராக 197 பேரும் வாக்களித்திருக்கிறார்கள். டிரம்ப்பின் கட்சியிலிருந்தும் 10 பேர் ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செனட் சபையில் இதே தீர்மானம் மூன்றிலிரண்டு பகுதியால் வெற்றிபெறவேண்டும். அச்சபையில் ரிபப்ளிகன் கட்சியின் தலைவர் மிச் மக்டொனால்ட் அதற்காக ஆதரவு கொடுக்கத் தயாராயிருப்பது தெரியவருவதால் அது நிறைவேறலாமென்றே கணிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் தனக்கெதிராகத் தீர்மானம் நிறைவேறியதைக் குறிப்பிடாமல் டிரம்ப் தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். “கலவரங்களுக்கும், சட்டமீறல்களுக்கும் எமது நாடு இடமல்ல. எங்கள் அமைப்பின் கோட்பாட்டிற்கு அவை முழுவதும் எதிரானவை. வன்முறையை நான் முற்றுமுழுதாக எதிர்க்கிறேன்,” என்று குறிப்பிட்ட டிரம்ப் அடுத்த வார ஜனாதிபதி பதவியேற்பு நாளன்று எவ்வித அசம்பாவிதங்களிலும் இறங்காமலிருக்கும்படியும் வேண்டிக்கொண்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்