சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை பிரான்ஸ் நாட்டுக்குள் கொண்டுவருகிறது.

சிரியாவில் எல்லைக்குள் குர்தீஷ் போராளிகளால் கைது செய்யப்பட்ட பிரெஞ்சுக்காரர்களின் பிள்ளைகளே அவை. குறிப்பிட்ட அந்தச் சிறைமுகாம்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பிரான்ஸ் அங்கிருந்து 35 பிரெஞ்சுக் குழந்தைகளைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் போரிலீடுபட்டு இறந்த பெற்றோரின், அல்லது பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளாகும்.                  

https://vetrinadai.com/news/al-hol-syria-is-terrorists-women/

பிரான்ஸ் கொண்டுவரவிருக்கும் ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளும் அந்த முகாமின் சமூக சேவை அதிகாரத்தால் பொறுப்பெடுக்கப்பட்டு எவருடைய உதவியும் பெற முடியாதிருக்கும் நிலையிலிருக்கும் 2 முதல் 11 வயதான பிள்ளைகளாகும். தனது நாட்டினராகினும் வயதுக்கு வந்தவராயின் அவர்களை அங்குள்ள சட்டத்தின் விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறது பிரான்ஸ். 

சாள்ஸ் ஜெ. போமன்                                                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *