Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸ் நாட்டுக்குள் விடுமுறையில் செல்ல எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

குளிர்கால விடுமுறை ஆரம்பமாவதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரித்துள்ள அரசு, விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக பிராந்தி யங்களுக்கு இடையே பயணிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.

பிரதமர ஜீன் கஸ்ரோ (Jean Castex) வியாழக்கிழமை மாலை தனது சில அமைச்சர்கள் சகிதம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை உறுதி செய்தார்.

பிரான்ஸில் குளிர்காலப் பள்ளி விடுமுறைகள் வலய ரீதியாக இந்த வார இறுதியிலும் அடுத்து வரும் வாரங்களின் முடிவிலும் ஆரம்பமாக உள்ளன.

விடுமுறை முடிந்து பாடசாலைகள் தொடங்கும் சமயத்தில் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களைக் குழுக்களாக சல்லிவேர் (prélèvement salivaire) என்கின்ற உமிழ் நீர் மாதிரி மூலமான வைரஸ் பரிசோத னைக்கு உட்படுத்தத் திட்டமிடப்பட்டுதாக சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய தொற்று நிலைவரம் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்யவேண்டிய கட்டத்தில் இல்லை. நிலைமையைப் பொறுத்து பின்னர் அதனை நடைமுறைப் படுத்தவேண்டி வரலாம் என்று பிரதமர் அறிவித்தார்.

“தேசிய அளவிலான பொது முடக்கம் எப்போதும் ஒரு கடைசித் தெரிவாகவே இருக்கும். அதற்கான ஒரு திகதியைத் தீர்மானிக்கின்ற கட்டம் இன்னும் வரவில்லை. அதனைத் தவிர்ப்பதற்கான பொறுப்புணர்வுடன் அரசு செயற்பட்டு
வருகிறது” – என்றார் பிரதமர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *