மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.
தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே மூன்று ஆண் கைதிகளின் மரண தண்டனை தலா 10 வருடச் சிறைத் தண்டனைகளாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஷீயா முஸ்லீம் இளைஞர்களான அப்துல்லா அல் – சஹர், டாவுத் அல் – மஹ்ரூம், அலி அல் – மஹ்ர் ஆகிய மூவரும் 2012 இல் அரசாங்கத்துக்கெதிராக அமைதியான ஊர்வலமொன்றில் பங்குபற்றியதற்காகக் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தண்டனைகளே இப்போது சிறைத்தண்டனைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்