அமிதாப் பச்சன் வீட்டுக்கு பொலீஸ் காவல் போடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெற்றோல் விலை அதிகரிக்கும்போது கடுமையாக விமர்சித்துவிட்டுத் தற்போது அவ்விலையுயர்வு பற்றி மௌனமாக இருக்கும் பிரபலங்கள் பற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் மஹாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிலொருவரான நானா பட்டொலெ.
முக்கியமாக அமிதாப் பச்சன் அக் ஷய் குமார் ஆகியவர்களைக் குறிப்பிட்டுச் சாடிய அவர் அமிதாப்பின் சினிமாக்கள் படமாக்குவதையும், வெளியிடுவதையும் தடுக்கப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார்.
அதையடுத்து அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் பொலீஸ் காவல் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்