பிரான்ஸில் ஐஸ்கிறீம்களில் ஆபத்து அளவு மீறி’எத்திலின் ஒக்சைட்’ கலப்பு கடைகளிலிருந்து மீளப்பெற உத்தரவு
கடும் வெப்பத்தால் தெருக்களில் ஐஸ் கிறீம் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து ஐஸ்கிறீம் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் சந்தைகளில் விற்பனையாகின்ற அறுபதுக்கும் மேற்பட்ட ஐஸ்கிறீம்வகைகளில் எத்திலின் ஒக்சைட்(ethylene oxide) அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாகக் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அவற்றைச் சந்தைகளில் இருந்து திருப்பிப் பெறுமாறு உத்தரவிடப்பட் டுள்ளது. மீளப் பெறப்படவேண்டிய ஐஸ்கிறீம் வகைகளது விற்பனைப் பெயர்களை பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் உணவுப் போட்டி, நுகர்வு மற்றும் மோசடி கட்டுப்பாட்டுக்கான ஆணையகம் வெளியிட்டுள்ளது.
Netto, Carrefour, Adélie (Intermarché), Extrême, Picard போன்ற பிரபல ஐஸ்கிறீம் தயாரிப்புப் பெயர் களும் அதில் அடங்கி உள்ளன.
ஐஸ்கிறீம் தயாரிப்பின் போது அதனைக் கட்டியாக பேணுவதற்காகக் கலக்கப்படுகின்ற ஒரு இடைநிலைப் பொருளாகியஎத்திலின் வாயு மற்றும் ‘கரோப்’ மாவு (carob flour) போன்றவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது எத்திலினின்அளவு ஜரோப்பாவில் அனுமதிக்கப்பட்டஅளவை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
எத்திலின் ஒக்சைட் எனப்படும் நிறமற்றவாயு தானியங்களைத் தொற்று நீக்குவதற்கும், வேறு சுத்திகரிப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஜஸ்கிறீமை உமிழும் தன்மையோடு பேணுவதற்காக அதில் கலக்கப்படுகின்ற ‘கரோப்’ மாவு எத்திலின் ஒக்சைட் மூலமே சுத்திகரிக்கப்படுகிறது.
அண்மையில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட எள் தானியத்திலும் எத்திலின் செறிவு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எள்ளுத் தானியம் எத்திலின்வாயு மூலம் தொற்று நீக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எள் கலக்கப்பட்ட பல உணவுப் பொருள்களது விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளது.
எத்திலினின் அபரிமிதமான பாவனை புற்றுநோய் மற்றும் கருச் சிதைவு போன்ற ஆபத்துகளை மனிதர்களில் ஏற்படுத்துகின்றது. இதனால் அதன்பாவனையை ஐரோப்பிய ஒன்றியம் 2011 ஆண்டில் தடை செய்தது.ஆயினும்வெளிநாடுகளில் இருந்து ஐரோப் பாவுக்கு வருகின்ற உணவு தயாரிப்புப் பொருள்களில் எத்திலின் கலந்து காணப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.