ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் வருகைக்கு திறக்கப்பட்டது
தூய நகரம் செயற்திட்டத்துக்கு அமைவாக தியாகி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
யாழ் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக தியாகி அறக்கட்டளை சார்பில் தியாகேந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்பத்தில் ஆரியகுளம் பெயரெழுத்து மற்றும் வரவேற்பு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.ஆரம்ப பவனியின்போது வாணவேடிக்கைகளும் தண்ணீர் பீச்சியடிக்கும் நிகழ்வுகளும் மின்னொளி வண்ணங்களும் நிகழ்த்தப்பட்டது. பின்னர் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமயப் பிரமுகர்களின் ஆசியுரையுடன் நிகழ்வு ஆரம்பித்தது. வரவேற்புரையை மாநகர ஆணையாளர் நிகழ்த்தியிருந்தார்.தொடர்ந்து மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
நிறைவில் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாதசங்கம நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.