பிரிட்டனில் “பிரயாண சிவப்பு பட்டியல் நாடுகள்” என்று இனி இல்லை..
பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு குறிப்பிடப்பட்ட ” சிவப்பு பட்டியல்படுத்தப்பட்ட நாடுகளை” அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் மாதம் 15ம்திகதி புதன்கிழமை காலை 4 மணிமுதல் இந்த விடயம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பாவே,தென்னாபிரிக்கா,சம்பியா, நம்பீபியா,மொசாம்பிக் உள்ளிட்ட 11 நாடுகளே நிறைவாக அந்தபட்டியலிருந்து நீக்கப்பட்ட நாடுகளாகும்.
இந்த பிரயாண சிவப்பு பட்டியல்படுத்தப்பட்ட நாடுகள் விபரம் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமிக்ரோன் திரிபடைந்த கோவிட்டினால் ஏற்பட்ட அவசர நிலையை கருத்தில்கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஒமிக்ரோன் தாக்கம் பரந்த அளவில் அதன் பரவல் அதிகமாகியுள்ள சூழ்நிலையில் இப்போது சிவப்பு பட்டியலில் நாடுகளை வைத்திருக்கும் தேவை ஏற்படவில்லை என பிரிட்டனின் சுகாதார செயலர் சஜிட் ஜாவிட் குறிப்பிடுகிறார்.
இருப்பினும் உலக நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் சகல பயணிகளும் தற்போதய பரிசோதனை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.