எதிர்பாராத அளவில் பரவியுள்ள ஒமிக்ரோன்- உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூற்று
உலகின் பல நாடுகளுக்கும் எதிர்பாக்கமுடியாத அளவிற்கு கோவிட் 19 இன் திரிபடைந்த ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கிட்டத்தட்ட 77 நாடுகளில் ஒமிக்ரோனால் பாதிப்புற்றோர் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும் வேறு பல நாடுகளிலும் இது பரவியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனக்குறிப்பிடும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர்.ரெட்ரஸ் அடனம், இதன் தொற்று வேகம் எதிர்பாக்கமுடியாத அளவிற்கு பரவியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை உலகம் இந்த ஒமிக்ரோன் தாக்கம் குறித்து குறைவாக மதிப்பிட்டு இப்போது தாக்கம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் சுகாதார அமைப்பின் தலைவர் கோடிட்டுள்ளார்.
இது குறைந்தளவு உடற் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றபோதிலும் , அந்த அந்த நாடுகளின் சுகாதார சேவைகள் , இதற்காக தயார்ப்படுத்தல்களில் இல்லாது கடும் சவாலான நாள்களை அவை எதிர்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.