இங்கிலாந்தில் இனி கோவிட் பாஸ்| நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் அங்கீகாரம்

இங்கிலாந்தில் கோவிட் பாஸ் (Covid Passes) திட்டத்தை கொண்டுவர, அந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 243 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இதன்படி , மிகப்பெரிய நிகழ்வுகள்,மக்கள் அதிகமாக கூடும் உள்ளக நிகழ்வுகள், இரவு விடுதிகள், போற்றவற்றிற்கு இந்த கோவிட் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு ஆளுங்கட்சிக்குள் பலமான எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகவும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவினாலேயே வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சனின் தலைமை வெற்றிபெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இனிவரும் நாள்களில் முகக்கவசம் கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்கெடுப்பில் ஆமோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.