‘கொவிட்’ உயிரிழப்பு ஏதும் பதிவாகாத முதல் நாளை சந்தித்தது இங்கிலாந்து.

இங்கிலாந்தில் “டெல்ரா” திரிபு (Delta variant) அச்சத்தின் மத்தியிலும் நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது.

இரண்டு தடவைகள் வைரஸ் அலைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில் திங்கள் -செவ்வாய்க் கிழமைகளுக்கு இடைப்பட்ட24 மணி நேரங்களில் மருத்துவமனைகளில் ‘கொவிட்’ உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

“தடுப்பூசி தெளிவான பலனை அளிக்கிறது” என்பதையே இந்த செய்தி உணர்த்தருவதாக சுகாதார அமைச்சர் Matt Hancock தெரிவித்திருக்கிறார். இது போன்ற மேலும் நாட்களை தொடர்ந்து எதிர்பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெருந்தொற்று நோய்க்கு ஜரோப்பாவிலேயே மிக அதிக எண்ணிக்கையாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்த நாடு இங்கிலாந்து. கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட மரணங்கள் எதுவும் நிகழாத முதல் நாளை அது எதிர் கொள்வது கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு இதுவே முதல் தடவை ஆகும். நீண்ட காலம் நீடித்தபொது முடக்கங்கள், வேகமான தடுப்பூசி ஏற்றல் என்பன காரணமாக இந்த நிலைமையை இங்கிலாந்து எட்டியுள்ளது. அங்கு 39 மில்லியன் பேர் (39 million)முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். வளர்ந்தோரது மொத்த எண்ணிக்கையில் இது 74.09 வீதம் ஆகும்.25 மில்லியன் பேர்(25 millions) இரண்டு ஊசிகளையும் ஏற்றியுள்ளனர். வளர்ந்தோரது மொத்த எண்ணிக்கையில் இது 48.09 வீதம் ஆகும்.

நாட்டின் சுகாதாரக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 21 ஆம் திகதி அங்கு கடைசி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு நாடு முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப உள்ளது. ஆனால் இந்தியாவில் கண்டறியப்பட்ட “டெல்ரா” (Indian variant)என்ற மாறுபாடடைந்த திரிபு இங்கிலாந்தின் பல பகுதிகளில் வேகமாகப் பரவிவருகிறது. அதன் காரணமாக நாடுவரவிருக்கும் குளிர் காலத்தில் மூன்றாவது முடக்கம் ஒன்றைச் சந்துக்க வேண்டிவரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த திங்களன்று வெளியாகிய தரவுகளின்படி 3ஆயிரத்து 300 புதியதொற்றுக்கள் பதிவாகி உள்ளன. இதுகுறிப்பிடக்கூடிய அதிகரிப்பு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *