ஒமிக்கிறோன் (Omicron) என்னும் காட்டுத்தீ|சில கேள்வியும் பதிலும்
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் கோவிட் தொற்று நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இது பதியப்பட்ட தொகையே, உண்மையான தொகை இதைவிட அதிகம் என தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவிகிக்கிறார்கள்.ஏனைய நாடுகளிலும் இவ்வாறே தான்.
இன்னும் வரும் நாட்களில் இதைவிட அதிக தொற்று ஏற்படும் என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி(CMO) பேராசிரியர் Chirist Whitty தெரிவித்திருகிறார். முன்னர் அதிகளவு தொற்றினை ஏற்படுத்திய டெல்டா ( Delta Varient ) வை பின்னுக்கு தள்ளி ஒமிக்கிறோன் பெருமளவு தொற்றினை ஏற்படுத்தி வருகிறது
ஒமிக்கிறோன் எவ்வாறு அதிகளவு தொற்றினை ஏற்படுத்துகிறது?
கோவிட்-வைரசானது அதன் மேற்பரப்பில் உள்ள கொம்பு வடிவிலான புரதத்தின் (spike protein) வழியாகவே மனதக் கலங்களை தொற்றுகிறது. டெல்டா வகை திரிபானது 23 வகையான கட்டமைப்பு மாறுதல்களை (mutation ) கொண்டது,குறிப்பாக வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதத்திலேயே (spike protein) இம் மாறுதல்கள் காணப்படுகின்றன. ஆனால் ஓமிக்கிறோன் வகையானது 50 வகையான கட்டமைப்பு மாறுதல்களைspike protein இல்கொண்டுள்ளது. பெருமளவு வீச்சிலான பரவலுக்கு இந்த மாறுதலே காரணமாக இருக்கின்றன. குறிப்பாக லண்டனில் அதிகமான வீதமான தொற்றுக்கள் இப்புதிய வகை திரிபினாலேயே ஏற்பட்டிருப்பாதக தேசிய சுகாதர சேவை(NHS) தெரிவித்திருக்கிறது.
ஒமிக்கிறோன் தொற்று நோய்த்தாக்கம் குறைவானதா?
டெல்டா வகையை விட ஒப்பிட்டளவில் ஒமிக்கிறோன் நோய்த்தாக்கம் குறைந்ததாகவே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் இன்னும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை, மேலும் ஆய்வுகள்,தரவுகள் தேவை என சொல்லப்படுகிறது. நோய்த்தாக்கம் குறைவாக இருப்பதற்கு இரண்டு காரணங்களை பேராசிரியர் Chirist Whitty சொல்கிறார்.
1.முன்னைய கோவிட் தொற்றிலிருந்து பெற்ற இயற்கையான நோய் எதிர்பு சக்தி (Natural immunity ).
2.வக்சின் மூலம் பெற்றுக்கொண்ட நோய் எதிர்பு சக்தி(
Acquired immunity).
வக்சின் எனும் கவசம்.
தொற்றுக்களின் எண்ணிக்கை லட்சத்தை தொட்டபோதும் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணம் வக்சினேயாகும். ஓமிக்கிறோன் தொற்றின் தீவிரத்தை மூன்றாவது வக்சின்(booster vaccine ) 85% ற்கு மேல் குறைப்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிகின்றன. லண்டனின் மொத்த சனத்தொகயில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னும் ஒரு வக்சினை கூட இன்னும் போட்டுக்கொள்ளவில்லை. இம்முறை இங்கிலாந்தின் மற்றய பகுதிகளை விட லண்டன் பெரு நகரத்தில் அதிக தொற்று ஏற்படுவதற்கு இதுவும் ஒருகாரணம். இங்கிலாந்தில் வக்சின் நாட்டமின்மை அல்லது தயக்கம் (vaccine hesitancy ) சிறுபானமை இன மக்களிடமே அதிகம் காணப்படுகிறது. இந்த வக்சின் hesitancy ற்கு மதம், மற்றும் சமூக பொருளாதர பின்னணி(Socio econimic background ) என்பன பிரதான பங்கு வகிக்கிறது. இவர்கள் வக்சின் தயக்கம் இவர்களுக்கும் மட்டும் ஆபத்தானதல்ல, சமூகத்திலுள்ள முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள், போன்றோருக்கும் ஆபத்தானது. ஆதலினால் மதமோ, வேறு எந்த நம்பிக்கையோ கொஞ்ச காலத்திற்கு தூக்கி பரணில் போட்டுவிட்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்.
எழுதுவது :த.தயாபரன்