மலேசியாவை தாக்கிய வெள்ளப்பெருக்கு|மக்கள் பெரும் பாதிப்பு
பல தசாப்தங்களிற்குப்பின் தாக்கிய மிக மோசமான வெள்ளப்பெருக்கால் மலேசிய நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியிலிருந்து பெய்த பெருமழை நாடுமுழுவதும் எட்டு மாநிலங்களை கடுமையாகத்தாக்கி பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, மலேசியாவின் தாழ்வான பகுதிகளில் சில நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளத்தால் மூழ்கடித்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆகக் குறைந்தது 14 பேருக்கு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய ராணுவம் படகுகள் மூலம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, தொடர்ந்து வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.
வானிலை ஆய்வு மையம் எதிர்வரும் நாட்களிலும் புயலோடு கூடிய அதிக கனமழை பெய்யக்கூடிய முன்னறிவிப்பை விடுத்துள்ளார் நிலைமை இன்னும் மோசமடையலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.