ஓமிக்ரோன் பரவல் வேகமும் விகிதமும் சமூகத்துக்கு அச்சுறுத்தல்|விஞ்ஞானி ஜெரமி ஃபரார் எச்சரிக்கை.

Omicron பரவும் வேகமும் விகிதம் அதன்  தீவிர தாக்கங்களை விட சமூகத்துக்கு  மிக அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரித்தானிய  அரசுக்கு ஆலோசனை வழங்கும் Sage அறிவியல் குழுவின் முன்னாள் உறுப்பினர் சேர் ஜெரமி குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்டின் திரிவடைந்த ஓமிக்ரானானது “நம்பமுடியாத அளவிற்கு வேகமாக” பரவி அளவிற்கு அதிகமாக சமூகத்தில் பரவி அச்சுறுத்தலாக உள்ளது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

சமூகம் “முறையாக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வரை காத்திருக்கலாம்”. ஆனால் இதற்கிடையில் மக்கள் இந்தக்காலங்களில் நடந்துகொள்ளும் தன்மைகளை பொறுத்தே கடுமையான கட்டுப்பாடுகளின் தேவையை எதிர்வரும் நாள்களில் தவிர்ப்பதற்கு ஏதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் திரிபாகிய ஒமிக்ரோன் ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தை விட பரவுதல் அதிகரித்து வருவதால் அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கையால் தேசிய சுகாதார சேவை அமைப்பில் நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் தாதியர்கள், மருத்துவர்கள், பொலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என சமூக அவசிய பணியாளர்கள் இந்த கோவிட் மூலம் சுய தனிமைப்படுத்தல்கள்  அதிகரிகரிப்பதால் அவர்களால் வேலை செய்ய முடியாமல் இருப்பதும் சமூகத்தின் செயல்பாட்டை மிகத்தடங்கல் அடையச்செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.