கிறிஸ்மஸ் தினத்தில் பிரிட்டன் மகாராணி பொதுவெளிக்கு வரமாட்டாராம்..
இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் தினத்தன்று பிரிட்டனின் மகாராணி பொதுவெளிக்கு வர சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. பக்கிங்ஹாம் அரண்மனை உதவியாளர்களால் அவர் “நல்ல நிலையில்” இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் வரும் கிறிஸ்மஸ் நாளான சனிக்கிழமையன்று GMT நேரம் 15:00 மணிக்கு அவர் நாட்டு மக்களுக்கும் பொதுநலவாய நாடுகளுக்கும் ஊடகங்கள் ஊடாக வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் தின இந்த செய்தி ,தற்காலத்தில் சவாலாக உள்ள தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த கிறிஸ்மஸ்க்கு முழுவதுமாக வின்டஸ்சர் அரண்மனையில் தங்குவார் என அறிவிக்க முன்னர் பதிவுசெய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மகாராணி தனது கணவர் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்குப் பின்னர் தனது முதல் கிறிஸ்துமஸில் இந்த ஆண்டு தனது கிறிஸ்துமஸ் செய்தியை மக்களுக்கு சொல்லவுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.