ஆன்மிகமும் வாழ்வும்

ஆன்மிகம் என்ற சொல், ஆன்ம-இகம்,ஆன்ம-இய ம் “ஆன்மிகம் கொள்கை” கொண்டிருக்கிறது. ஆன்மிகம் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையதாகும்.

மனிதனின் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் மனம் சார்ந்தது மட்டுமல்லாமல் உடலோடு உயிர் சேர்ந்தது. ஐம்புலன்களையும் கடந்ததாக ஆன்மிகம் வேறுபட்டு நிற்கிறது.


மனம் போன பாதையில் போகாமல் நன்மை எது? தீமை எது? இரண்டையும் சிந்தித்து பார்த்து செயல்பட வேண்டும்.
பிறவியின் கருத்தில் கொண்டு நீந்திக் கொண்டிருக்கிறோம்.


நாம் வாழ்க்கையில் வளரும் போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறப்பு வந்தவுடன் பிறவிக்கடல் கடக்கிறோம்.
இறைவன் திருவடியில் கரை சேர்க்கிறோம்.

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
ஆத்மா தாம் செய்த நல்வினை, தீவினை வினைகளுக்கு ஏற்ப பிறவிகளாக”ஓரறிவு முதல் ஆறறிவு” வரை உயிர்களை தோற்றுவிக்கிறார்.

உலகில் “ஆத்மா” நிலையானது. “உடல்”நிலையற்றது. உலகிலுள்ள இச்சைகளை அறவே அழித்து “விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் தாமே” உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்த பத்தாம் திருமுறையில் திருமூலர் கூறியிருக்கிறார்.

இறைவன் “ஜோதி” வடிவானவன். மெய்ஞானத்தை உண்மையான பரம்பொருளை காண முடியும்.
இறைவன் மெய்ஞானத்தை மனதில் நிறுத்தி இறைவனை சரணடைவதே பெரும் பாக்கியம். மெய்ஞானத்தின் வழியே உண்மையான பரம்பொருளை காண முடியும்.

எழுதுவது : மா.நந்தினி ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.