சபரிமலை ஐயப்பனுக்கு நாளை மண்டல பூசை

பிரசித்தமான ஆலயமான சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நாளை 26 12 2021 ஞாயிற்றுக்கிழமையன்று மண்டல பூஜை நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கேரள மாநிலத்திலித்திருந்து உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் உலக பிரசித்தம் பெற்ற ஆலயமாகும்.

கடந்த ஆண்டிலிருந்து உலகின் பெருந்தொற்றுக் காலமாகையால் சபரிமலைக்கு வருவதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து கோவிட் அலை சற்று குறைவடைந்தததால் முன்கூட்டிய பதிவோடு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்று குறைவடைந்த நிலையில் மகரவிளக்கு பூசை மற்றும் மண்டல பூசைகளில் பக்தர்களை அனுமதிக்க தேவம்ச நிர்வாக குழு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.கடந்த 15 ம் திகதி முதல் தினசரி முன்பதிவு செய்யப்பட்ட 60000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மாலை தலை சுமந்து கொண்டுவரப்டட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபங்களால் சிறப்பான ஆராதனை இடம்பெற்றது.

தொடர்ந்து நாளை மதியம் 1 மணிவரை மண்டல பூசை நிகழ்வுகள் இடம்பெறும்.

அதன்படி , சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அதிகரித்து வருகிறது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாளை இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் என்றும் .அதன்பின்னர், மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை மீண்டும் வரும் மாதம் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகிய சபரிமலையில் முக்கிய நிகழ்வுகள் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.